பெங்களூரில் பெய்த பணமழை.., சண்டை போட்டு மல்லுக்கட்டி எடுத்த வாகன ஓட்டிகள்.., தீவிர விசாரணையில் காவல்துறை!!

0
பெங்களூரில் பெய்த பணமழை.., சண்டை போட்டு மல்லுக்கட்டி எடுத்த வாகன ஓட்டிகள்.., தீவிர விசாரணையில் காவல்துறை!!
பெங்களூரில் பெய்த பணமழை.., சண்டை போட்டு மல்லுக்கட்டி எடுத்த வாகன ஓட்டிகள்.., தீவிர விசாரணையில் காவல்துறை!!

பெங்களூரு நகரில் சாம்ராஜ் பேட்டையில் கே ஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் எப்பொழுதும் அதிக கூட்டத்துடனே காணப்படும். சொல்ல போனால் பெங்களூரில் மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கி வருகிறது. இதனால் கேஆர் மார்க்கெட் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள சாலைகள் அனைத்தும் எப்போதும் பரபரப்பாக இருக்கும். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அப்பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எனவே வழக்கம் போல் மக்கள் கே ஆர் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அந்த வேளையில் கருப்பு பிளேசர் மற்றும் பேண்ட் அணிந்தும், கழுத்தில் பெரிய கடிகாரத்தை மாட்டிக்கொண்டு ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வண்டியை நிறுத்தி தனது பையில் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டுக்களை பாலத்தில் இருந்து தூக்கி வீசினார். பணத்தை வீசியதால் மக்கள் அடித்து பிடித்து பணங்களை எடுக்க தொடங்கினர்.

தமிழகத்தில் ஜன.27-ஆம் தேதி  இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். மேலும் விசாரணையின் போது பாலத்தில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர் அருண் என்பதும், அவர் ஒரு கபடி வீரர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்ந்து காவல்துறை அவரை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here