‘கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கக்கூடாது’ – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!!!

0

கொரோனா தடுப்பூசி 2-வது தவணை போட வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறும் மற்றும் தடுப்பூசியை வீணாக்கக்கூடாது என்றும் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தடுப்பூசியை வீணாக்கக்கூடாது:

கொரோன 2அம் அலை பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்பாக அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.

கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி 2-வது தவணைக்காக ஏராளமானோர் காத்திருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- அனைத்து மாநிலங்களும் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அதோட மட்டும் அல்லாமல் தடுப்பூசிகளை வீணாக்குவதை மாநிலங்கள் குறைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு அளித்த தடுப்பூசிகளில், 2-வது தவணை பாக்கி இருப்பவர்களுக்கு 70 சதவீத தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். மீதியை மற்றவர்களுக்கு போட வேண்டும்.

மேலும், மாநிலங்களுக்கு அடுத்த 2 வாரங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அதற்கேற்ப மாநிலங்கள் நன்கு திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி, மே 15 முதல் 31-ந்தேதி வரையிலான ஒதுக்கீடு குறித்து மே 14-ந்தேதி தெரிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here