ட்விட்டருக்கு இணையாக புதிய செயலி அறிமுகம் – வெளியான அப்டேட்!

0
ட்விட்டருக்கு இணையாக புதிய செயலி அறிமுகம் - வெளியான அப்டேட்!
ட்விட்டருக்கு இணையாக புதிய செயலி அறிமுகம் - வெளியான அப்டேட்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு எலான் மாஸ்க் வாங்கிய பின் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, ப்ளூஸ்கை என்ற புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

புதிய செயலி

கடந்த 2022 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் பல சர்ச்சைகளும் குளறுபடியும் வர தொடங்கியது. மேலும் ட்விட்டர் நிறுவனத்தில் பணி புரிந்த அதிகாரிகளும், பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அது மட்டுமில்லாமல் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். அவர் விலகிய பின் தன்னுடைய செல்லபிராணியை தலைமை நிர்வாகி என அறிவித்தார்.

பொறியியல், மருத்துவ படிப்பிறகான புத்தகங்கள் தாய்மொழியான ‘தமிழில்’ – பாடநூல் கழகத் தலைவர் அறிவிப்பு!

இப்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்விட்டருக்கு இணையான புதிய செயலியை ஜாக் டோர்சி அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த புதிய செயலிக்கு ப்ளூஸ்கை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சோதனை ஆப்பிள் இயங்குதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த செயலி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மே மாதம் இந்த செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் எனவும், பயனர்களின் வசதிக்கு தகுந்தாற் போல இந்த செயலி வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here