கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை நிச்சயமாக நடத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

1

இந்தியா முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் நடத்த அனுமதி..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது.

11 மற்றும் 12- ம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பாடத்திட்டமே தொடரும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு கல்லூரி மற்றும் பல்கலை. மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறுதி தேர்வுகளை சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்றும் இதில் யு.ஜி.சி. வழிகாட்டுதல்களின்டி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. Pls final year ku exam vaikathiga I begg you tn govt please exam cancel pannuga????????????????????????????????????????????????????????????????????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here