M.Phil படிப்புகள் நிறுத்தம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள் அறிவிப்பு!!

0

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே..!

புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,

  • கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
  • முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
  • 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.
  • 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை
  • உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
  • நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.
  • கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
  • பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம்.
  • 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
  • எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு.
  • பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
  • கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.
  • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.
  • இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்..!

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைச்சரவை – 5 தமிழர்கள் பதவியேற்பு..!

M.Phil படிப்புகள் நிறுத்தம்; அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தம் என உயர்க்கல்வித்துறை செயலாளர் கூறினார். பொறியியல் போன்ற உயர் படிப்புகளில், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம் எனவும் இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று தற்போது 8ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here