தமிழகத்தில் இந்த காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி – அரசு அதிரடி!!

0
தமிழகத்தில் இந்த காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி - அரசு அதிரடி!!
தமிழகத்தில் இந்த காளைகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு அனுமதி - அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அமல்படுத்திய அவசர சட்டத்தை தடை செய்ய பீட்டா விலங்கு நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜல்லிக்கட்டு:

கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகமே ஒன்று சேர்ந்து அகிம்சை வழியில் குரல் கொடுத்ததில் குடியரசுத்தலைவர் அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கினார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த மிருகவதை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது பீட்டா அமைப்பு. தற்போது இந்த வழக்கை கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மிகவும் பாதுகாப்பாக நடந்து வருவதாக வாதம் செய்தார். பின்னர் நீதிபதிகள் எழுத்துப்பூர்வமாக இரு தரப்பினரையும் ஒப்படைக்க கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக நவம்பர் 23 ல் உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்தது. இதையடுத்து இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் இனவிருத்திகாக வளர்க்கப்படும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வைக்கின்றனர். மேலும் ஒன்றரை வயது முதல் ஆறு வயது வரை உள்ள காளைகள் மட்டும் தான் பங்கு பெறுகின்றன. வயதான மாடுகளை தங்கள் வீட்டில் ஒருவராக வளர்க்கின்றனர்.

என்னையை அதிகமா கஷ்டபடுத்துனாரு.., ரொம்ப sadist மேடம் அவரு.., கணவனை நினைத்து புலம்பிய வைக்கம் விஜயலட்சுமி!!

பின்னர் ஒரு காளையை அடக்க பலர் காளையை பிடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு, தமிழக அரசு காளையின் திமிலை ஒருவர் மட்டும் பிடித்தவுடன் மற்ற வீரர்கள் காளையை விட்டுவிடுவார்கள். தவறும் பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இதை நேரில் காண உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்தார். பின்னர் நீதிபதிகள் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here