மீனவர்களுக்கு எச்சரிக்கை.., இதை செஞ்சா நடவடிக்கை பாயும்.., அரசு அதிரடி அறிவிப்பு!!

0
மீனவர்களுக்கு எச்சரிக்கை.., இதை செஞ்சா நடவடிக்கை பாயும்.., அரசு அதிரடி அறிவிப்பு!!
மீனவர்களுக்கு எச்சரிக்கை.., இதை செஞ்சா நடவடிக்கை பாயும்.., அரசு அதிரடி அறிவிப்பு!!

தமிழகம் மட்டுமின்றி கடலோர பகுதியில் வாழும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை என்று கடந்த சில வருடங்களாக அரசாங்கம் அறிவித்து தான் வருகிறது. அப்படி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்தாலும் பெரும்பாலானோர் பயன்படுத்தி கொண்டே தான் இருக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபடும் போது அதிக கடல் பரப்பு மீன் பிடிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல வகை மீன்கள் அதிக அளவில் பிடிபடுவதுடன் கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை வளம் பாதிப்படைகிறது. இதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு மொத்த மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here