உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு.. சவாலான குரூப்பில் இந்தியா?? முழு விவரம் உள்ளே!!

0
உலக கோப்பைக்கான அட்டவணை வெளியீடு.. சவாலான குரூப்பில் இந்தியா?? முழு விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக தென் ஆப்பிரிக்காவில், U19 ODI உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் 16 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதில், 16 அணிகள் 4 குரூப்களின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் போல் மோத உள்ளன. இதன் முடிவில், 4 குருப்களிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதும். இந்த போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், 50 ஓவர் உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டிகளில் விளையாடும். அனைத்து அணிகளும் அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் 17 வரை தென்னாப்பிரிக்காவில் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.


ICC U19 ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை குழுக்கள்:

குழு A:
இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா

குழு B:
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து

குழு C:
ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா

குழு D:
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம்

Enewz Tamil WhatsApp Channel 

செல்போன் பயனாளர்களுக்கு குட் நியூஸ்., இனி டேட்டா இல்லாமல் டிவி சேனல் பார்க்கலாம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here