தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிகர்களில் வைகை புயல் வடிவேலுக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் காமெடியில் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட காமெடி ஜம்போவான இவர் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படி பிசியாக இருந்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். 24 ஆம் புலிகேசி படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 9 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கு வராமலும், காசை திருப்பி கொடுக்காமலும் இழுத்தடித்தால் தான் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பட்டது. ஆனால் இது மாதிரி நெறய முன்னணி நடிகர்கள் செய்கிறார்கள், அவர்களுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.