ரேஷன் கார்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
ரேஷன் கார்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் கார்டுகளில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் நிதியுதவி, பரிசு பொருள் என அவ்வப்போது தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் எளிய முறையில் ஆன்லைனில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ரேஷன் கார்டு பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மற்றும் நகல் என அனைத்து வசதிகளும் இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் புதிதாக விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்து புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க சில மாதங்கள் கடக்கிறது. இதனால் தமிழக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதையடுத்து இதுபோன்று புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் நுகர்வோர்களுக்கு மாற்று ரேஷன் கார்டு வழங்க உள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் இனி இது கிடையாது.., அது தான்.., அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

அந்த வகையில் மாற்று ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தில் கார்டு கட்டணம் ரூ.20, சேவை கட்டணம் ரூ.25 என ரூ.45 செலுத்த வேண்டும். பின்னர் நுகர்வோருக்கான மாற்று ரேஷன் கார்டு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் புதிதாக விண்ணப்பித்தவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்காமல் உடனடியாக அரசின் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் புது ரேஷன் கார்டு தயாரானதும் அதுவும் நுகர்வோரின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக சேவை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here