உயிர் பயத்தில் தத்தளிக்கும் பொது மக்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்!!

0
உயிர் பயத்தில் தத்தளிக்கும் பொது மக்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்!!
உயிர் பயத்தில் தத்தளிக்கும் பொது மக்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்!!

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் பருவமழை காலத்தில் அதிக உயிர் சேதம் ஏற்படுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் பெரிதாக காணப்படுகிறது.

மழைநீர் வடிகால் பணி:

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்ந்த வண்ணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி பெய்து வரும் கனமழையால் அங்கு அங்கு இருக்கும் பள்ளக்கிடக்கில் மழை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையால் மக்களின் பொது வாழ்க்கையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூரில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

இதனால் சாலைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதே போன்று தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மழை பெய்தால் சேதாரங்கள் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் திமுக கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் 1000 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைப்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. சென்னையில் உள்ள சில பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது.

காலிறுதிக்கு முன்னேறிய காஃப் – NO 1 வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போல் சில இடங்களில் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. அந்த வகையில் வளசரவாக்கம் பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் தற்போது பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் வேகமாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முடித்து எங்களுக்கு நல்வழி காண்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here