
கடந்த சில மாதங்களாக சென்னை ஐ.ஐ.டி. வளாக விடுதியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எம்.எஸ். 2ம் ஆண்டு படித்து வந்த மும்பையை சேர்ந்த ஸ்டீவன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த விசாரணையில், “படிப்பில் கவனம் செலுத்த இயலாததால் தற்கொலை செய்து கொள்ள உள்ளேன்” என குறிப்பிட்ட ஸ்டீவன் எழுதிய கடிதம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் இதுகுறித்த விரிவான விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பி.டெக். 3ம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை ஐஐடிக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., பா.ம.க.ராமதாஸ் வலியுறுத்தல்!!!
இந்நிலையில் குடும்ப பிரச்சனை, பண பிரச்சனை காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கர்நாடகவை சேர்ந்த வீரேஷ் என்பவர் அதிக அளவில் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து அரங்கேறும் தற்கொலை நிகழ்வு பொது மக்களிடையே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.