இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB…, பிரபல கால்பந்து அணிகளுடன் இணைந்து அசத்தல்!!

0
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB..., பிரபல கால்பந்து அணிகளுடன் இணைந்து அசத்தல்!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்த RCB..., பிரபல கால்பந்து அணிகளுடன் இணைந்து அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் (ஐபிஎல்) தொடரின் பிரபலமான விராட் கோலியின் RCB அணியானது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதனை படைத்துள்ளது.

RCB:

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் லீக் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற தொடராகும். உள்ளூரில் நடத்தப்படும் இந்த லீக் தொடரில், தங்களுக்கு பிடித்த இந்திய வீரர்கள் பலர் விளையாடுகிறார்கள் என்பதால் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ள தொடராகவே ஐபிஎல் பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடரை பொறுத்த வரையில், தோனியின் CSK, ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ், விராட் கோலியின் RCB உள்ளிட்ட அணிகள் மிகவும் பிரபலமானவை. இதில், இதுவரை நடந்த சீசன்களில் மூன்று முறை 2வது இடத்தை பிடித்த RCB அணி சமூக வலைத்தளத்தில் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோஸ்ட் பாப்புலர் வரிசையில் டாப் 5 இடத்தை RCB பிடித்துள்ளது.

8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்…, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!!

இந்த டாப் 5 பட்டியலில், RCB அணியை சேர்த்து, பிரபல கால்பந்து நட்சத்திர வீரர்களான, மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் உள்ள ரியல் மாட்ரிட், FC பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் PSG போன்ற அணிகள் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here