ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்…, உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு தான் என்ன??

0
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்..., உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு தான் என்ன??
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்..., உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு தான் என்ன??

வளர்ந்து வரும் டிஜிட்டல் நாகரிகத்தில் நாள் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடைக்கின்றனர். இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் போன்ற தேவையற்ற செயல்களும் அதிக அளவில் நிகழ்வதால், தமிழக அரசு இணையவழி சூதாட்டங்களுக்கு தடை விதித்தது. இந்த தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சமீபத்தில் விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கில், “தடை சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக கருத முடியாது” என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு தமிழக அரசு, “சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. இருப்பினும், தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? எச்சரிக்கையில் ஒடிசா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here