‘பணம் இருக்குனு சில மூஞ்சீங்க நடிக்க வராங்க’ – தி லெஜெண்ட் சரவணனை மறைமுகமாக கலாய்த்த ராதா ரவி!!

0

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளரான மற்றும் தி லெஜண்ட் திரைப்பட நடிகருமான சரவணன் அருளை மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளார் நடிகர் ராதா ரவி.

நடிகர் ராதா ரவி:

தமிழக சினிமா வரலாற்றில் தனது கடையின் விளம்பர படத்தை நடித்து அதன் மூலம் சினிமா துறையில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. அவர் நிறுவன விளம்பரங்கள் மூலம் பல நடிகைகளை வைத்து அவரே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவை கலந்த வரவேற்பை பெற்ற போதிலும் தன்னிடம் உள்ள பண வசதியை கொண்டு தானே படத்தை தயாரித்து அதில் நடித்து வெளியிட்டுள்ள படம் தான் தி லெஜண்ட். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் தி லெஜண்ட் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சரத்குமாரின் இரண்டாவது மனைவியின் மகனும், மகளும் இவர்கள் தானா?? புகைப்படம் உள்ளே!!

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரவின் நிழல் சக்ஸஸ் மீட்டில் இயக்குநர்கள் பாரதிராஜா, கேஎஸ் ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன், நடிகர் ராதா ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் ராதா ரவி லெஜெண்ட் சரவணனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடந்த இரவின் நிழல் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட குணச்சித்திர நடிகர் ராதா ரவி நிகழ்ச்சியில் பேசியதாவது, இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டால் அப்படி ஆயிடும் போல. விளம்பரத்துல ஆடுவதை பார்த்து நடிக்க வருவான்னு சொன்னேன். அதே மாதிரியே வந்துட்டான்யா என கூறி இருந்தார் ராதா ரவி. இதனை தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருளைதான் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here