நீண்ட நாள் ஹீரோ கனவை நிறைவேற்றினாரா சரவணன் அண்ணாச்சி? தி லெஜண்ட் முழு விமர்சனம்!!

0
நீண்ட நாள் ஹீரோ கனவை நிறைவேற்றினாரா சரவணன் அண்ணாச்சி? தி லெஜண்ட் முழு விமர்சனம்!!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் உருவாகிய தி லெஜண்ட் திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முழு விமர்சனம்:

ஜேடி ஜெர்ரி இணைந்து இயக்கி, சரவணன் அருள் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. Urvashi Rautela, பிரபு, விஜயகுமார், விவேக், நாசர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனது நீண்ட நாள் கனவான, ஹீரோ ஆசையை சரவணன் சரியாக பயன்படுத்தினாரா? என்றால் அது கேள்விக்குறிதான். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியான சரவணன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, தனது தாத்தா ஆரம்பித்த  கல்லூரியை  எடுத்து நடத்துகிறார்.

அந்த சமயத்தில், தனது பால்ய நண்பரான ரோபோ சங்கரை பார்க்கிறார். அப்போது, தனது நண்பரின் மொத்த குடும்பமும் சர்க்கரை நோயால், அவதிப்பட்டு ஒரு கட்டத்தில் இறந்து விடுகின்றனர். இதனால் வேதனை அடைந்த சரவணன், இனி யாருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என, இதற்கான ஒரு தீர்வை கண்டுபிடிக்கிறார். தனக்கு வரும் தடைகளைத் தாண்டி, தனது முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதுதான் படத்தின் மொத்த கதை.

ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் அனைத்தும் படத்தில் வொர்க் அவுட் ஆனதாகவும், ஆனால், தேவையற்ற இடத்தில் உள்ள பாடல்களும், ஒரு சில நகைச்சுவைகளும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைக்கதை, இயக்கம், எடிட்டிங் என மொத்தமும் மெகா சொதப்பல். மொத்தத்தில் படம் 5 க்கு 2 மதிப்பெண்களை பெற்று, ரசிகர்களின் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here