மீண்டும் லெஜெண்ட் சரவணனின் தரமான செய்கை.., இதுல எத்தனை கோடி கொட்ட போகுதோ??

0
மீண்டும் லெஜெண்ட் சரவணனின் தரமான செய்கை.., இதுல எத்தனை கோடி கொட்ட போகுதோ??
மீண்டும் லெஜெண்ட் சரவணனின் தரமான செய்கை.., இதுல எத்தனை கோடி கொட்ட போகுதோ??

லெஜண்ட் அருள் சரவணன் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் குறித்து இணையத்தில் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

தி லெஜண்ட்

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி, கடந்த ஆண்டு வெளியான தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தில் காலடி எடுத்து வைத்தார். விளம்பர இயக்குனர் ஜேடி-ஜெர்ரி படைப்பில் உருவான இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அதுபோக புதுமுக நடிகை ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சரவணன் அண்ணாச்சியை வசை பாடாதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தின் முடிவு எப்படி இருந்தாலும் சரி, என்னுடைய நடிப்பு பயணத்தை மட்டும் எப்போதும் நிறுத்தப் போவதில்லை என அண்ணாச்சி வெளிப்படையாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பளத்துக்காக அப்பவே சொல்லி அடிச்ச ஆண்டவர்.., ஆடிப்போன தயாரிப்பாளர்! உலகநாயகன்னா சும்மாவா?

சமீபத்தில் காஷ்மீருக்கு சென்ற அண்ணாச்சி அவரின் இரண்டாவது படத்தின் அப்டேட் குறித்து கூடிய விரைவில் வர போகிறது என்று கூறினார். இந்த நிலையில் தி லெஜண்ட் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து சோசியல் மீடியாவில் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அருள் சரவணன் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று அதிரடியாக வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here