‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்… தமிழக அரசு கொடுத்த பதில் மனு.., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0
‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்... தமிழக அரசு கொடுத்த பதில் மனு.., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்... தமிழக அரசு கொடுத்த பதில் மனு.., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இயக்குனர் சுதிப்தோ சென் படைப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் “தி கேரளா ஸ்டோரி”. இப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பல நட்சத்திரங்கள் லீடு ரோலில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே மக்கள் மத்தியில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதைக்களம் தான். கேரள மாநிலத்தை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதத்திற்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க கும்பலில் சேர்வது போன்ற கதையை வடிவமைத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் இந்தப் படத்திற்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சில பகுதிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் படம் வெளியான நிலையில், எதிர்ப்பு கிளம்பியதால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

இதனை தொடர்ந்து படத்தின் மீதான தடைக்கு எதிராக “தி கேரளா ஸ்டோரி” பட தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இதை தொடர்ந்து மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், தடை விதித்தது குறித்து மேற்கு வங்க அரசு பதிலளிக்கவும், அதே போல் தமிழக அரசாங்கம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Chat-க்கு Lock வச்சுக்கலாம்.., செம்ம அப்டேட்!!!

இந்நிலையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட 19 தியேட்டர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த படத்துக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்காததால், தியேட்டர் உரிமையாளர்களே அந்த படத்திற்கு பதிலாக வேறு ஒரு படத்தை திரையிடுவதாகவும், இதற்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here