அழியும் நிலையில் ஹிமாலயன் வயகரா காளான் – சிவப்பு பட்டியலில் சேர்ப்பு..!

1

உலகின் விலை உயர்ந்த ஹிமாலயன் வயகரா என அழைக்கப்படும் காளான் அழியும் நிலையில் இருப்பதால் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமான ஐ.யூ.சி.என். சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

ஹிமாலயன் வயகரா காளான்..!

உலகின் விலையுயர்ந்த காளான் வகையை சேர்ந்த ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ் ஹிமாலயன் வயகரா என்றும் அழைக்கப்படுகிறது. ஹிமாலயன் வயகரா காளான் கோண் வடிவத்தில் கம்பளிப்பூச்சி போன்ற தோற்றத்தில் காணப்படும் இந்த காளான் இந்தியா, சீனா, பூடான், நேபாளம் நாடுகளில் காணப்படுகிறது. குறிப்பாக இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியில் காணப்படுகிறது.

இந்த காளான் இந்தியாவில் ஒரு கிலோ சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும் சீனா மற்றும் சர்வதேச சந்தைகளில் ரூ.20 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.

சிவப்பு பட்டியலில் சேர்ப்பு..!

இந்தக் காளானை மருத்துவ குணத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, கேன்சர், ஆண்மையின்மை போன்ற பல நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவச் சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம். இந்நிலையில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தில் இந்த காளான் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்..!

கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில், ‘அழியக்கப்படக்கூடிய’ பிரிவில் இந்த ஹிமாலயன் வயகரா சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அதிக அளவு அறுவடை செய்ததன் விளைவாக அதன் உற்பத்தில் 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஐயூசிஎன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.யூ.சி.என்., இந்திய பிரதிநிதி விவேக் சக்சேனா கூறுகையில் இந்த காளான் சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டதற்கான நோக்கம் அதை பாதுகாப்பதற்காக முறையான அரசாங்க கொள்கைகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதே ஆகும் எனக் கூறினார்.

சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் பாதிக்கப்படுவர். அவர்கள் இந்த காளான் சேகரிப்பையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here