கொரோனா வைரஸ் மிக மோசமாக அழிவை ஏற்படுத்தும் – உலக சுகாதார அமைப்பு..!

0

கொரோனா வைரஸ் பாதிப்புகள் உலகளவில் மிக மோசமான நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

உலக மக்களின் முதல் எதிரி கொரோனா..!

corona virus
corona virus

இது குறித்து அவர் ஜெனீவாவில் பேசியதாவது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டுள்ளதாகவும், உலக நாடுகள் விரிவான யுக்திகளை கையாளாவிட்டால் இன்னும் சில காலத்திற்கு இயல்பு நிலை திரும்பப் போவதில்லை என்றும் அமெரிக்காவில் அதிக அளவு கொரோனா தொற்றுகள் பதிவாகுவதையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலக மக்களில் முதல் எதிரியாக கொரோனா வைரஸ் திகழ்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உச்சகட்டத்தை எட்டும்..!

சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான் நிலைக்கை கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார்.

சீனாவில் கனமழை – வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!

இதற்கிடையில் கொரோனா வைரஸின் பரவல் தொடக்கம் குறித்து ஆராய சீன சென்று இருக்கும் தங்களது குழு பணியை தொடங்கும் முன்பு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவன அதிகாரி மைக் ரியான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here