இனிமே இங்கெல்லாம் லிப்ட வசதி இருக்கனும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

0

தமிழ் நாட்டில் இரண்டு மாடிகளுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் மின்தூக்கி (Lift) வசதியானது கட்டாயம் வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் உட்கட்டமைப்பை தடையில்லாமல் அணுக வசதியை ஏற்படுத்த முடியும் என்று குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

மின்தூக்கி வசதி:

தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் விவாதம் நடந்து கொண்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையானது தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். இதில் முதன்மையானதாக முதல்வர் அவர்கள் குடிசை மாற்றுவாரியத்தின் பெயரினை “நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என்று மாற்றப்படுவதாக அறிவிதார்.

இதில் மாற்றுத்திறனாளி நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை குறித்த விவாதமானது நடந்தது. இந்த விவாதத்தில் தமிழகத்தில் இரண்டு அடுக்கு மாடிகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மின்தூக்கி வசதியானது கட்ட வேண்டும் என்றும் இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here