விமானத்தில் பறந்த “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” புகழ் தம்பதி..,பலத்த வரவேற்பு கொடுத்த பயணிகள்.., நெகிழ்ச்சியான சம்பவம்!!

0
விமானத்தில் பறந்த
விமானத்தில் பறந்த "தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்" புகழ் தம்பதி..,பலத்த வரவேற்பு கொடுத்த பயணிகள்.., நெகிழ்ச்சியான சம்பவம்!!

“தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்ற நிலையில், சமீபத்தில் அந்த படக்குழுவினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்:

தாயை பிரிந்து சிறு சிறு குட்டிகளாக கொண்டு வரப்பட்ட ரகு மற்றும் பொம்மி என 2 யானை குட்டிகளையும், பழங்குடி தம்பதியரான பொம்மன் மற்றும் பெள்ளி எப்படி பராமரித்து வளர்த்தார்கள், அவர்களுக்குள் இருந்த உறவு குறித்து 47 நிமிடம் “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் மூலம் அற்புதமாக காட்டி இருந்தார் இயக்குனர் கார்த்திகி. இப்படம் 95 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதையும் தட்டி சென்றது. மேலும் இந்திய சினிமாவில் ஆவணப்படத்திற்கு விருது கிடைத்தது இதுவே முதல் முறை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் படக்குழுவினரை பாராட்டிய தமிழக முதல்வர் பரிசுத்தொகையும் வழங்கினார். இதை தொடர்ந்து இவர்களை பாராட்டும் விதமாக சமீபத்தில் மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அதன் பின்னர் மும்பை விமான நிலையத்தில் கோவைக்கு பொம்மன் மற்றும் பெள்ளி கிளம்பினர். அப்போது விமானத்தில் இருந்த, விமானி மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் உங்களோடு பயணிப்பதில் பெருமை கொள்கிறோம் என்று பாராட்டு மழையை பொழிந்துள்ளனர்.

TNPSC Group 4 தேர்வு முடிவில் குளறுபடியா?? வெளியான ஷாக் ரிப்போர்ட்.., தேர்வர்கள் அதிருப்தி!!!

இதுகுறித்து பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி கூறியதாவது, மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விமானத்தில் திரும்பிய போது, விமானத்தில் இருந்த அனைவரும் எங்களுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதை நாங்கள் எதிர்பார்கவே இல்லை. மேலும் அந்த குட்டி யானைகளால் தான் நாங்கள் இந்த அளவுக்கு பிரபலமாகியுள்ளோம். இந்த பெருமையெல்லாம் அவர்களை சாரும் என்று பி பெருமிதமாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here