இதுவரை 223 முறை  உருமாறிய கொரோனா வைரஸ்., இனி இதுதான் நடக்கும்., மத்திய சுகாதாரதுறை முக்கிய அறிவிப்பு!!

0
இதுவரை 223 முறை  உருமாறிய கொரோனா வைரஸ்., இனி இதுதான் நடக்கும்., மத்திய சுகாதாரதுறை முக்கிய அறிவிப்பு!!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா  தற்போது உருமாறிய நிலையில் ஜேஎன்1  வைரஸ் என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி வருகிறது.  இந்த ஜேஎன்1 வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மஞ்சு மாண்டவியா ஒரு முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதாவது ஒரு வைரஸ் பலமுறை ஒரு உருமாறும் போது அதன் தீவிரம் படிப்படியாக குறைந்து விடும். அது போல தான் கொரோனா தற்போது பல முறை உருமாறி தற்போது அதன் வீரியம் குறைந்து விட்டது. இதனால் இந்த வைரஸின் உருமாற்றங்கள் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதன்படி கொரோனா வைரஸ் இதுவரை 223 முறை உருமாற்றம் அடைந்து தீவிரமா குறைந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here