மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்துவட்டி புகார் – திடீர் தலைமறைவு!!

0

கொரோனா காரணமாக மக்கள் பலர் வருமானமின்றி தவித்து வந்தனர். மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் தனது மகள் படிப்பு மற்றும் திருமண செலவுக்கு சேர்த்து வைத்த பணத்தை மக்களுக்கு வழங்கி உதவி செய்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர்மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சலூன் கடைக்காரர் மோகன்:

கொரோனா பேரிடரில் மக்கள் பலர் சரியான வருமானம் இன்றி தவித்து வந்தனர். பலர் ஒரு வேலை சாப்பிட்டிற்கும் கஷ்டப்பட்டு வந்தனர். மதுரையில் சலூன் கடை நடத்தி வந்தவர் தான் மோகன்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

mohan
mohan

இவர் தனது மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்காக பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த பணத்தில் 1,000 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இதனால் தமிழக முதல்வர் அவரை பாராட்டினார். மேலும் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும் சலூன் கடை உரிமையாளரை பாராட்டினார்.

mohan
mohan

இதனையடுத்து அவரும் அவரது மனைவியும் பாஜக கட்சியில் இணைந்தனர். மேலும் அவர்கள் கந்துவட்டி தொழில் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்பு நகரை சேர்ந்த செங்கைராஜன் சலூன் கடை உரிமையாளர் மோகனிடம் 30,000 கடன் வாங்கியுள்ளார். சரியான முறையில் வட்டி கட்டி கடனையும் முழுவதுமாக திருப்பி செலுத்தியுள்ளார்.

ஆனால் அதன்பிறகும் வட்டி செலுத்தும்படி மோகன் அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் சலூன் கடை மோகன் மீது செங்கைராஜன் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் காரணமாக அவரை விசாரணைக்கு அழைத்த நிலையில் தற்போது அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here