ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய ப்ரியங்காவுக்கு கெடு – மத்திய அரசு உத்தரவு..!

0

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காவை டில்லியில் லுட்யன் பகுதியில் உள்ள அரசு பங்களாவை வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு..!

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அவரது மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு கடந்த நவம்பரில் திரும்பப் பெற்றது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவோர்க்கு அரசு பங்களாவை ஒதுக்க முடியாது எனவும் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் லுட்யன் பகுதியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவை காளி செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here