கொரோனாவிற்கு இனி முற்றுப்புள்ளி – ஆக்ஸ்போர்டு பல்கலையில் தயாரானது கொரோனா எதிர்ப்பு மருந்து.!

0
277

சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகமெங்கிலும்பரவி வருகிறது. இந்த கொரோனவால் பல உயிர்கள் பலியாகின. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் உள்ளவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இந்த வைரசால் உலகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 27 ஆயிரத்திற்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயினில் இறந்தவர்களை புதைக்க இடமில்லாத அளவிற்கு கொரோனா தனது கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னையில் ரயில் பெட்டியை கொரோனா வார்டாக மாற்றிய தெற்கு ரயில்வே.!

உலகையே அழித்து வரும் இந்த கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர், கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். அடீனோவைரஸ் வேக்சின் வெக்டர் மற்றும் சார்ஸ் கொரோனா-2 புரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் மேற்கு ஆப்ரிக்காவில் பல உயிர்களை எடுத்த எபோலா வைரஸை கட்டுப்படுத்த, இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தும், அதுபோன்றே பயனளிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

கொரோனா உள்ளதா என 5 நிமிடங்களில் கண்டறியலாம் – அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு.!

இங்கிலாந்து நாட்டின் தேம்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஆய்வகத்தில் இருக்கும் கிளினிக்கில் வைத்து மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி சோதனை செய்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 18 வயது முதுல் 55 வயது வரையிலான 510 தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here