கொரோனா உள்ளதா என 5 நிமிடங்களில் கண்டறியலாம் – அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு .!

0

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் ஒன்று ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்று கண்டறியும் எளிய சோதனை கருவியை வெளியிட்டுள்ளது.

கொரோனாவை கண்டறியும் கருவி

5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும் இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு – பெங்களூர் டாக்டர் அதிரடி.!

ஒரு சிறிய டோஸ்டரின் அளவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சோதனை கருவி 13 நிமிடங்களுக்குள் எதிர்மறையான முடிவுகளைக் காட்டுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பரந்த அளவிலான நோயறிதல் தீர்வுகளை இந்த சோதனை மேம்படுத்தும் என்று அபாட் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான ராபர்ட் ஃபோர்டு கூறினார்.

நோய் தீவிரமாக உள்ள பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு வெளியே இந்த சோதனையை பயன்படுத்தப்படலாம் என ஃபோர்டு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குறித்த சோதனை கருவியை அனுப்ப எஃப்.டி.ஏ உடன் அபோட் ஆய்வகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், இந்த சோதனை எஃப்.டி.ஏ-வால் அனுமதிக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் மட்டுமே அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதனை பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது “உலகில் எங்கும் இல்லாத வகையில் நாள்தோறும் ஒருலட்சம் பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். அடுத்த இரு வாரங்களில் இது அதிகரித்து, உலகில் அதிகமான மருத்துவப் பரிசோதனை செய்யும் நாடாக நாங்கள் மாறுவோம்” என கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here