விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் முக்கிய தொடர்களில் ஒன்றான பொன்னி சீரியலில் வைஷ்ணவி சுந்தர் மற்றும் சபரிநாதன் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இருந்து முக்கிய நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இதில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் சமிதா ஸ்ரீகுமார் இதுவரை நடித்து வந்திருந்தார். ஆனால் தற்போது சில காரணங்களால் இவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இனி வரும் நாட்களில் இவருக்கு பதில் சிந்துஜா தான் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.