கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவம் – தமிழக அரசுக்கு கோரிக்கை!!

0

மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்ற ஆங்கில மருந்துகளை நாடுவதை விட, தமிழக பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தலாம் என அரசுக்கு திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

பெருந்தொற்றான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை மோசமாக தாக்கிக்கொண்டிருக்கிறது. தமிழகம் போன்ற பல மாநிலங்கள் இந்த நோய் தாக்கத்தின் உச்சத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸுக்கான போரில் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்துவதை போல, பாரம்பரிய ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளையும் பயன்படுத்தும்படி தமிழக அரசுக்கு சினிமா திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா பரவலில் மத்திய அரசு அலட்சியம்? சமூக ஆர்வலர்கள் புகார்!!

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வைரஸ் தொற்று கை மீறிப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலோ, ஆக்சிஜனை உற்பத்தி செய்வதாலோ கொரோனவை கட்டுப்படுத்த முடியாது. முன்னதாகவே தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தின் புதிய அரசு, நோய் கட்டுப்பாடு குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சீன நாடு தற்போது நோய் தொற்று இல்லாமல் இருப்பதன் காரணம் அதன் பாரம்பரிய மருத்துவம் தான். அதே போல இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்த பாரம்பரிய ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தலாம். தவிர தமிழகத்தில் சித்த மருத்துவத்தில் தேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். மேலும் ஹோமியோபதி மருத்துவம் மூலமும் கொரானாவை கட்டுப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனுடன் ஆயுர்வேத மருத்துவத்தையும் இணைத்து தமிழகத்தில் மருத்துவ மையங்களை உருவாக்கலாம். எனக்கு தெரிந்த ஹோமியோபதி, சித்த மருத்துவத்தின் மூலம் பலர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்காக அதிக அளவு பணமும் செலவாகாது. தமிழக அரசு தயவு செய்து இந்த கோரிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here