ஆனந்த யாழை மீட்டுகிறாய்.,தங்க மீன்கள் பட செல்லம்மா பாப்பாவா இது? இப்போ என்ன செய்றாரு தெரியுமா?

0
ஆனந்த யாழை மீட்டுகிறாய்.,தங்க மீன்கள் பட செல்லம்மா பாப்பாவா இது? இப்போ என்ன செய்றாரு தெரியுமா?

இயக்குனர் ராம் இயக்கிய  தங்க மீன்கள் படத்தில், செல்லம்மா என்ற குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கிய, தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா என்ற குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சாதனா. இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்தப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற இவர், படத்தை முடித்த கையோடு தன் சொந்த ஊரான துபாய்க்கு சென்று விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இயக்குநர் ராம் அறிமுகம்

அங்கு தன் பள்ளி படிப்பை முடித்து, 10ம் வகுப்பில் 1000க்கு 994 மார்க் வாங்கி, விருதுபெற்றார். வளர்ந்து நாயகியான இவர் மலையாளத்தில் மம்முட்டியின் மகளாக நடித்து அசத்தினார். இந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக நடிப்பதற்கு, 3 மாதம் வரை ஒரு மாற்றுத்திறனாளி  பள்ளியில் தங்கியிருக்கிறார்.

டயானா விருது

இந்தப் படத்தால் தேசிய விருது பெற்ற இவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான இசை பயிற்சி, பேச்சு பயிற்சி ஆகிய பள்ளிகளை தொடங்கி இருக்கிறார். தற்போது சமூக சேவகியாக  இருந்து எல்லோர் வாழ்விலும் ஒளி ஏற்றிய இவரின் தற்போதைய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேரன்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here