தொகுப்பாளர்களாக களம் இறங்கும் மெகா ஸ்டார்கள்.. இங்க விஜய் சேதுபதி.. அங்க இவரா!!!

0

உலக அளவில் புகழ் பெற்ற  ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பது நம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கு தொகுப்பை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளார்.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப், உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.   இதனிடையே தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழிலும் நடக்கவுள்ளது, இத்தனை மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்தியாவில் இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் தயாராக உள்ளது. தமிழில் விஜய் சேதுபதி போல மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். தமிழில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

தற்போது தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா அறிவிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில்உள்ள ஒரு படப்பிடிப்பு அரங்கில் இந்த நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here