தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் இத்தனை நாள் பல்வேறு சதி திட்ட வேலைகளை செய்து சொத்தை ராகினி பெயருக்கு மாற்றி விட்டார். இதனால் கோதை குடும்பத்தார் அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் ராகினி தன் புருஷன் செய்தது தான் சரி என தன் குடும்பத்தையே தூக்கி எறிந்து விட்டார். இப்படி இருக்கையில் அர்ஜுனின் உண்மை முகம் இனி தான் ராகினிக்கு தெரிய வருமாம். அதாவது தன் அப்பா அம்மாவின் இந்த நிலைமைக்கு நாம் தான் காரணம் என ராகினி வருத்தப்படுவாராம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த நேரம் அர்ஜுனன் குடும்பத்தார் அனைவரும் கோதை குடும்பத்தை பற்றி தப்பு தப்பா பேசி ராகினியை வெறுக்க வைத்து விடுவார்களாம். ஒரு கட்டத்தில் அர்ஜுன், அவரது அக்கா, அம்மா எல்லோரும் இன்னும் கொஞ்ச நாளில் ராகினி பேர்ல இருக்கிற சொத்தை நம்ம பேருக்கு மாத்திரனும். அப்பதான் நமக்கு நிம்மதி என பேசிக் கொண்டு இருப்பார்களாம். அதுக்கப்புறம் ராகினியையும் ஒரு வழி பண்ணனும் என அர்ஜுனனின் அம்மா சொல்லுவாராம். இதை கேட்ட பிறகு தான் ராகினிக்கு இவர்கள் நடிக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருமாம்.
சித்தார்த் நடித்த “சித்தா” படத்தின் டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!