தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோடில் தமிழ் கோவிலுக்கு வந்து எல்லோரையும் வீட்டுக்கு வர சொல்கிறார். அப்போது யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க தமிழ் நான் என்ன செத்தா போயிட்டேன். என் ஞாபகம் உங்களுக்கு இல்லையா என கோபத்துடன் பேசுகிறார். அப்போது கார்த்திக், நடேசன் வீட்டுக்கு வர சம்மதிக்க கோதை மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பின் நடேசன் கோதையை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த பக்கம் அர்ஜுன் மீண்டும் ராகினியிடம் நல்லவன் போல் நடிக்கிறார். அடுத்ததாக ராகினி உள்ளே செல்ல கோதை குடும்பத்திற்கு இன்னும் மோசமான நிலைமை வரணும். அப்பதான் நம்ம சந்தோஷமா இருக்க முடியும் என்கிறார். பின் தமிழ் வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் வாங்க கடைக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.