தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி அர்ஜுனுக்கு சாதகமாக பேசிக்கொண்டு தன் அப்பா அம்மாவையே வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இன்னொரு பக்கம் அர்ஜுன் தான் நினைத்தது எல்லாம் நடந்து விட்டது என ஆணவத்தில் இருக்கிறார். ஆனால் அவருக்கு நிச்சயம் தமிழ் பதிலடி கொடுப்பார் என்று தான் தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீன் வெற்றி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணே கலைமானே’ சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சீரியலை விட்டு விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இவர் சீரியலை விட்டு விலகுவதால் இவருக்கு பதில் ராஜபார்வை, சந்திரலேகா தொடரில் ஹீரோவாக நடித்த முன்னா கார்த்திக் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.