ரஞ்சிதமே பாடல் செய்த நெகிழவைத்த சம்பவம்.., கலக்கத்துடன் தமன் வெளியிட்ட வீடியோ!!

0

முன்னணி நடிகரான தளபதி விஜயின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 11 அன்று தமிழ்நாட்டில் திரை அரங்குகளில் வெளியானது. மேலும் தெலுங்கில் “வாரிசுடு ” என்ற பெயரில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது.

இந்த படம் தமிழில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே” பாடல் வெளியான நாள் முதல் அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது.

தற்போது இந்த “ரஞ்சிதமே” பாடலை கேட்டு கேரளாவில் உள்ள கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள்ளே உள்ள சிசு அசைகிறது என்று அந்த பெண்மணி கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை இசையமைப்பாளர் தமன் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டு “இந்த நாள் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here