பெண்களின் வேலை இது தான் – தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!

0
பெண்களின் வேலை இது தான் - தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!
பெண்களின் வேலை இது தான் - தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!

பெண்களின் வேலை குழந்தை பெற்று தருவது மட்டுமே, இதை தவிர வேறு பெரிய வேலையை அவர்களால் செய்ய முடியாது என தாலிபான்களின் சர்ச்சை பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை கருத்து:

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர். இதனால், இங்கு பாதுகாப்பை உணராத மக்கள் அங்கிருந்து வெளியேற தினமும் காபூல் விமான நிலையத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும், அங்கிருந்த வெளிநாட்டு தூதரகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. விரைவில் இங்குள்ள மற்ற மக்களையும் மீட்போம் என அமெரிக்க அதிபர் உறுதியளித்திருந்தார்.

பெண்களின் வேலை இது தான் - தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!
பெண்களின் வேலை இது தான் – தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!

இதனை அடுத்து, தாலிபான்கள் சார்பாக பத்திரிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இவர்கள் கூறுவது போல், நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் 6 மாத கர்ப்பிணியான பெண் காவல் அதிகாரி தாலிபான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெண்களின் வேலை இது தான் - தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!
பெண்களின் வேலை இது தான் – தாலிபான்கள் கூறிய சர்ச்சை கருத்து!!

இது மட்டுமல்லாமல், தாலிபான் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆப்கான் பெண்களை பற்றி செய்தி சேகரித்த பத்திரிகையாளர் இரண்டு நபரை இழுத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக தகவல் பரவியது. இப்படி தங்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக நடந்து கொண்ட தாலிபான்கள் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது, பெண்களால் குழந்தை மட்டும் தான் பெற்றுத்தர முடியுமே தவிர, பிற கடினமான பணிகளை செய்ய முடியாது. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆப்கான் அமைச்சரவையில் பெண்கள் நியமனம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அவர்கள் இவ்வாறு பதில் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here