அமெரிக்கர்களை உயிரோட வெளியே அனுப்புனது நாங்க தான் – தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

0
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கலாம்.. ஆனால் இது மட்டும் கட்டாயம் - புது விதியை விதித்த தாலிபான்கள்!!

அமெரிக்கர்களை உயிரோடு வெளியே விட்டதுக்கு எங்களுக்கு நன்றி சொல்லியிருக்க வேண்டும் என தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு:

ஆப்கானை கடந்த சில நாட்களுக்கு முன் தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இதனை அடுத்து, அங்கு தற்காலிக ஆட்சியை அமைத்துள்ள தாலிபான் இயக்கம் “தான் சொன்னது ஒன்று, ஆனால் செய்வது ஒன்று” என்ற நோக்கில் நடந்து வருகிறது. ஆப்கானில் பெண்களையும், பத்திரிகைக்காரர்களும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாப்போம் என அறிவித்த அவர்கள், தற்போது அதற்கு நேர்மாறாக நடந்து வருகிறார்கள்.  அதாவது, பத்திரிக்கையாளர்களை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், பெண்களின் உரிமைகளை வேரோடு சாய்த்து வரும் அவர்கள், தங்கள் உரிமைக்காக போராடும் பெண்களை சாட்டையடி கொடுத்து அடக்கி வருகின்றனர்.  இந்த நிலையில், சமீபத்தில் பதவி  ஏற்றுள்ள ஆப்கானின் தற்காலிக அமைச்சரவையில், உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதாவது, அமெரிக்க படைகளை வெளியே விட்டதற்கு, அவர்கள் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஆனால் மாறாக எங்கள் ஒட்டுமொத்த நிதிகளையும் நிறுத்தி எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர்.

இது மட்டுமல்லாமல், அமெரிக்க பெடரல் ரிசர்வ், சர்வதேச நாணய  நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை எங்கள் நாட்டிற்கான நிதி உதவியை  துண்டித்து விட்டன. இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 1.2 பில்லியன் டாலர்கள்  நன்கொடை நிதி வழங்கவுள்ளதாக ஐ.நா கூறியுள்ளதாகவும், அமெரிக்காவிலிருந்து சுமார் 64 மில்லியன் டாலர் நிதி வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும், உலக நாடுகள் கொடுக்கும் அனைத்து உதவிகளையும் பெற தயாராக உள்ளதாகவும் அறிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here