13 ஆண்டுக்கு பின் விஜய்யுடன் இணையும் முக்கிய பிரபலம் – வெளியான தளபதி 66 பட அப்டேட்!!

0
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் கோரியோகிராபராக  டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தளபதி 66 அப்டேட்:

இளைய தளபதி விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு குறித்த அப்டேட் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடம், பொங்கல் அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தளபதி 66 படத்தில் கோரியோகிராபராக பிரபுதேவா பணியாற்ற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படத்தை இயக்கிய பிரபுதேவா, விஜய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் அவருடன் பணியாற்ற உள்ளதாக பேசப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் காம்போ 13 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விரைவில், இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here