“தளபதி 66 படத்தில் இது இல்லவே இல்லை” – எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு! மெர்சலாகி போன ரசிகர்கள்!!

0
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில், சண்டைக் காட்சிகளே இல்லை என்பதை படக்குழு உறுதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி அப்டேட்:

தளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 66. அண்மையில், பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில், படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. 2ம் கட்ட ஷூட்டிங்கை, ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டது.

ஆனால், விஜய் மறுத்ததால் இந்த ஷூட்டிங்கையும் சென்னையில் நடத்த படக்குழு தீவிரமாக செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் அனைத்து ஆட்களையும் ஒப்பந்தம் செய்த போதிலும், இன்னும் ஸ்டாண்ட் மாஸ்டரை மட்டும் படக்குழு தேர்வு செய்யவில்லை. இதனால் தளபதி66 படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லை என்பது உறுதியாகி விட்டதாக பேசப்படுகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்யை 90ஸ் கால கட்டத்தில் பார்த்ததுபோல் பார்க்கலாம் என  படக்குழு தெரிவித்துள்ளதாக அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here