விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் – தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

0
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தில், 5வது முறையாக விஜய்யுடன் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாகவும், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட்:

நடிகர் விஜய் தனது, பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில், தளபதிக்கு அண்ணனாக ஷாம் என்ற நடிகரும், அப்பாவாக சரத்குமாரும் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஜயுடன் இணைந்து, மெர்சல், சர்க்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்த யோகி பாபு ஐந்தாவது முறையாக தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார். இதுவரை விஜய், யோகி பாபு மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டோர் பங்குபெற்ற காமெடி காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 66 படத்தில் யோகி பாபு இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here