ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்னை சாலையில் வளம் வந்த தளபதி – வைரலாகும் வீடியோ!!!!

0
ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்னை சாலையில் வளம் வந்த தளபதி - வைரலாகும் வீடியோ!!!!
ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்னை சாலையில் வளம் வந்த தளபதி - வைரலாகும் வீடியோ!!!!

தளபதி விஜய் என்றாலே மாஸ் தான் அவரை எப்பொழுதும் ட்ரெண்டிங்கிலே அவரது ரசிகர்கள் வைத்திருப்பார்கள், சில தினங்களுக்கு முன் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை சாலையில் தளபதி விஜய் தனது விலை உயர்நத ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒட்டி சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸில் வளம் வந்த தளபதி..

தளபதி விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார் சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெறுகிறது, கொரோனா பரவல் காரணமாக சற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பட குழுவினர் கூறினர். இந்நிலையில் இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 21 வெளியானது, இந்த தகவலை விஜயின் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடினார்கள், சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தளபதி 65 மற்றும் தளபதி பிறந்தநாளை வாழ்த்துக்கள் மற்றும் பீஸ்ட் போன்றவற்றை பற்றிமட்டுமே ட்ரெண்டிங்காக இருந்தது.

தளபதி விஜய் 65வது படத்தின் முதல் நாள் பூஜை முதல் படப்பிடிப்பிற்க்காக ஜார்ஜியா செல்லபோது விமான நிலையத்தில் உள்ளவாறு எடுத்த போட்டோக்கள் பின் ஜார்ஜியாவில் படப்பிடிப்பின் போது அங்கு அவர் எடுத்த புகைப்படங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்ரெண்டிங் செய்தனர் அவரது ரசிகர்கள், சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு தனது வாக்கை அளிக்க நீலாங்கரை வீட்டிலிருந்து சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு சென்ற வீடியோ கூட பயங்கர ட்ரெண்ட் ஆனது,

இப்படி விஜய் என்ன செய்தாலும் காட்டு தீ போல் பரவி சமூக வலைத்தளங்களை அதிர வைப்பது அவரது ரசிகர்களின் வழக்கம் அதேபோல் நேற்று தளபதி விஜய் தான் வைத்திருக்கும் விலையுர்ந்த காரண ரோல்ஸ் ராய்சீல் சென்னை சாலையில் வளம் வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் தளபதிதான் காரை ஒட்டி செல்கிறார் என்றும் அது அவர் தானா என்ற சந்தேகம் இருந்தது ஆனால் அது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் தான் காரின் நம்பர் TN 07 BV 0014 என்று நெட்டின்சன்கள் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here