தளபதி விஜய் அலுவலகத்தில் இறந்து கிடந்த மர்மநபர் – போலீசார் தீவிர விசாரணை! ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
 தளபதி விஜய் அலுவலகத்தில் இறந்து கிடந்த மர்மநபர் - போலீசார் தீவிர விசாரணை! ரசிகர்கள் அதிர்ச்சி!!

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகனான நடிகர் விஜய், அலுவலகத்தில் பெயிண்டர் வேலைக்கு வந்த பிரபாகரன் என்பவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 இறந்து போன நபர் :

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் தற்போது, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை நீலாங்கரையிலும், இவரது அலுவலகம் பனையூரிலும் அமைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் தனது அலுவலகத்திற்கு பெயிண்ட் அடிக்க அண்மையில் முடிவு செய்தார். இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பெயிண்ட் வேலையில் பிரபாகரன் என்ற பெயிண்டர் ஈடுபட்டு வந்தார்.

நேற்று வேலையை முடித்த இவர் வீடு திரும்பாமல், மது அருந்திவிட்டு மீண்டும் விஜய் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென, காலையில் அவர் வாயில் இரவு சாப்பிட்ட உணவுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பிரபாகரன் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here