விஜய் 67வது படத்திற்கு யாரு தான்பா டைரக்டரு?? வெளியான செய்தியால் குழம்பிய ரசிகர்கள்!!

0

விஜய்யின் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லி தான் இயக்குவார் என எதிர் பார்த்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வந்து ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

விஜய் 67

விஜய்யின் 65 ஆவது திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் என செய்திகள் வந்தன.

மேலும் விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லி தான் இயக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது விஜய்யின் ஜில்லா படத்தை இயக்கிய இயக்குனர் நேசன் தான் 67ஆவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேசனின் விக்கிப்பீடியா பக்கத்தில், நேசன் தான் விஜய்யின் 67 ஆவது படத்தை இயக்கவுள்ளதாக அப்டேட் ஆகியுள்ளது. இதனால் யார் தான் விஜய்யின் 67ஆவது படத்தை இயக்க போகிறார்கள் என ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here