66வது படத்தில் ‘தோழா’ பட இயக்குநரா??? தளபதி ரசிகர்களுக்கு இன்ப செய்தி!!!

0
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!
தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான் - சூசகமாக அறிவித்த படக்குழு! கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!!

நடிகர் விஜயின் 65வது படம் தயாராகி வரும் நிலையில், 66 ஆவது படத்தை தெலுங்கு திரையுலக இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

தோழா’ பட இயக்குநர் வம்சி:

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் முடிவடைந்த பின்னர், விஜய் 66 படத்திற்கான பணிகள் தொடங்கும் என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த படத்தை தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்க உள்ளார்.

இந்த தகவலை தெலுங்கு ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் வம்சி அதிகார பூர்வமாக கூறியுள்ளார். மேலும் படத்தில் பணிபுரியும் மற்ற கலைஞர்களின் விவரம் ஊரடங்கிற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். முன்னர் வம்சி பாபு மற்றும் பூஜா ஹேக்டே நடிப்பில் வெளியான மகராசி படத்தை இயக்கி இருந்தார்.

முன்னதாக விஜயின் மாஸ்டர் படம்; ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. தற்போது அவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக வம்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் என்றும் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கில் சாப் படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here