தளபதி 66 படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரா? – வைட்டிங்லேயே வெறியாகும் விஜய் ரசிகர்கள்!!

0

தளபதியின் 66 வது படத்தில் தெலுங்கு புகழ் மகேஷ் பாபு இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

களமிறங்கும் மாஸ் கூட்டணி:

தளபதி விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு, மகேஷ்பாபு நடித்த ‘மகரிஷி’ திரைப்படம் மூலம் பல்வேறு தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.  தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பிரபலமாக விளங்கும் மகேஷ் பாபுவும், தளபதியும் வெகு காலமாக மிக சிறந்த நண்பர்களாக பழகி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி மற்றும் கில்லி படங்களை தமிழில் ரீமேக் செய்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் தளபதி.  இந்த நிலையில்,  தளபதி 66 வது பட பூஜையில் மகேஷ் பாபு கலந்து கொள்ள உள்ளதாகவும், ஒரு காட்சியிலாவது அவரை நடிக்க வைக்க இயக்குனர் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  இதனை அடுத்து, இவர் தளபதியுடன் இணைந்தால் மாஸ் ஆக இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here