
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்குள் வசூலை வாரி குவிக்க தொடங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் UK-வில் முதல் நாள் ரூ 1.63 கோடி வசூல் செய்தது. தற்போது லியோ படம் UK-வில் மட்டும் ரூபாய். 1.75 வசூல் (pre-sales) செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது சமீபத்தில் வெளியாகி வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ஜெயிலர் படத்தின் வசூலையே மிஞ்சி சாதனை படைக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
அடேங்கப்பா.., வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!