தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில் , இதையடுத்து வெங்கட் பிரபு படத்தில் இயக்க இருக்கிறார். அதற்கான முதல் கட்ட பணி கூட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்காக தான் விஜய், வெங்கட் பிரபு சமீபத்தில் வெளிநாட்டிற்கு கூட சென்று இருந்தனர். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, சினேகா உள்ளிட்ட நடிகைகள் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நடிகை தான் என்று உறுதி செய்யும் விதமாக புகைப்படம் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சினேகா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எனவே தளபதி 68 ல் கண்டிப்பாக சினேகா தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இது தளபதி 68 படத்திற்காக என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், இது தளபதி 68 படத்திற்காக எடுத்த புகைப்படம் இல்லையாம், சினேகா மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து நடிக்கும் “ஷாட் பூட் த்ரீ” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.அதனால் தளபதி 68 படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.