தளபதி 68 அப்டேட்.., வெற்றி இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் விஜய்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

0
தளபதி 68 அப்டேட்.., வெற்றி இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் விஜய்.., இணையத்தில் கசிந்த தகவல்!!

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 68 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68:

இந்திய சினிமாவின் சிறந்த நடிகராக விளங்குபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முடிவடைய இருக்கிறது. மேலும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரை காண உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கிய லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படம் ரசிகர் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவர் இயக்க இருக்கும் தளபதி 67 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . அதாவது விஜய்யை வைத்து மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, தளபதி 68 படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளாராம்.

ஐயோ பளபளக்குதே.., அதுவும் பீச்ல இந்த டிரஸ்ல டாலடிக்கிறீங்க அனிகா.., கிறங்கிப்போன இளவட்டங்கள்!!

மேலும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கின்றது. அதுமட்டுமின்றி பான் இந்திய மூவியாக உருவாக உள்ள இப்படத்தை 300 கோடி செலவில் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நான்காவது முறையாக இணையும் இந்த கூட்டணிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here