தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தனுஷ் – உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தனுஷ் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் தனது 67-வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

தளபதி 67:

கைதி திரைப்பட ஹிட்டை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. ஆக்சன் மற்றும் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டு முன்னணி ஹீரோக்கள் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டதால் மாஸ்டர் திரைப்படம் நல்ல ஹிட்டை கொடுத்தது.

அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது விஜய் தனது 66-வது திரைப்படத்தில் தெலுங்கு இயக்குனரான வம்சியுடன் இணைந்துள்ளார். தளபதி 66 திரைப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாஸ் ஹிட்டை கொடுத்தது.

தளபதி 67 திரைப்படமும் மிக பெரிய அளவில் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக தனுசும் விஜய்யும் எதிரெதிரே மோதிக்கொண்டால் கண்டிப்பாக அந்த திரைப்படம் மாஸ் ஹிட்டை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here