‘தளபதி 65’யில் சிவகார்திகேயனா?? வைரலாகும் மாஸ் அப்டேட்!!

0

“தளபதி” விஜய்யின் அடுத்த திரைப்படமான “தளபதி 65” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

“தளபதி 65” திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சனின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் உறுதி செய்யப்படவில்லை. அதன் காரணமாக விஜய் ரசிகர்கள் இந்த படத்தினை “தளபதி 65” என்று கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதே போல் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைத்து வருகிறார்.

கொரோனாவால் மரணம் அடைந்த சமுத்திரக்கனி பட இயக்குனர் – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை மற்றும் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது. இப்படியான சூழலில், தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோர் அமர்ந்து பேசுவது போல உள்ளது. இதன் மூலமாக கண்டிப்பாக சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு தனது பங்களிப்பினை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் ஒரு பாடலை விஜய்க்காக பாடலாம் அல்லது எழுதலாம் என்று கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. காரணம், “மாஸ்டர்” திரைப்படத்தில் நடிகர் விஜய்க்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் “அந்த கண்ண பாத்தா” என்ற பாடலை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தினை “தளபதி” ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here